உடன்பிறந்த சகோதரிகளை கரை சேர்க்க, பெரும் பொறுப்புடன் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன், கடமைகளை நிறைவேற்றுவதை விவரிக்கும் நாவல்.
எப்படியாவது சகோதரிகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று தவிக்கிறான். இயலாமையை நினைத்து உதவ எண்ணியவரிடம் பணிகளை ஒப்படைக்கிறார். அதன் மூலம் சம்பாதித்து சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
இதற்கிடையே அமுதா என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவளது சகோதரர்கள் அம்போ என்று விட்டுச் சென்ற நிகழ்வு என நகர்கிறது. பொறாமை கொண்ட சமுதாயம் களங்கம் கற்பிக்கிறது. களங்கத்தை துடைத்து கைப்பிடித்தானா என்பதை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்கிறது. அற்பர்களுக்கு பாடம் புகட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்