சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொழில் துறையில் சாதனை படிக்கட்டில் ஏறியதை சுவாரசியம் குன்றாமல் தெரிவிக்கும் நுால். உற்பத்தி துறையில் முன்னேறியது குறித்த விபரங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவாகியுள்ளன.
சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஹேமா. பெரு நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒரு நிறுவனத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார். எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத் துறையில் முன்னேறியது பற்றி விபரமாக எடுத்துரைக்கிறது.
கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் முதலீட்டு நிறுவனத்தின் சொந்தக்காரராக திகழ்கிறார். இந்த சாதனையை நிகழ்த்த துணிந்த தன்னம்பிக்கையே முதலீடு என்கிறார். சுயதொழில் துவங்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக திகழும் நுால்.
– ஒளி