குறள் வெண்பாக்களால் 40 அதிகாரங்களில் அமைந்த நுால். வாழ்க்கைக்கு உதவும் கருத்துக்கள் அறனியல், உலகியல், ஒழுகியல், வாழ்வியல், பொதுவியல் என பெரும் பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழின் தொன்மை, பெருமை புதுமையாக பதிவிடப்பட்டுள்ளது. அறஞ்செயல், அருளுடைமை, ஈகை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களில் அறக்கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
‘ஈகைக் குணமுடையோர் வாழும் உலகத்தில் சாகத் துணிபவர் யார்’ என்ற பா மூலம் இவ்வுலகில் ஈகை பண்பு மிகுந்துள்ளமை உணர்த்தப்படுகிறது. ஒப்புரவு, செய்ந்நன்றி, நாடு, புகழ் என 10 அதிகாரங்களில் உலகியல் சார்ந்த கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
இலக்கணக் குறிப்புடன் அமைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்