மாமன்னன் ராஜராஜனின் வாழ்க்கையை விளக்கும் நுால். காந்தளூர்ச் சாலை கலமறுத்த நிகழ்வு முதல் கங்கம்பாடி, நுளம்பம்பாடி, கொல்லம், ஈழம், குடமலை கலிங்கம் என புகழ் பெற்ற வெற்றிகள் பதிவிடப்பட்டுள்ளன.
மூவர் தேவாரத்தை ஏழு திருமுறைகளாக வகுத்து, பண்ணமைத்து, இடைவிடாது ஓதிக்கொண்டேயிருக்க 48 ஓதுவார்களையும், உடுக்கை, மத்தள கலைஞர்கள் நியமனம் செய்தது பற்றி உள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோவில் வழிபாட்டிற்காக அந்தணர், இசைவாணர்கள், ஆடல் மகளிர்கள் என நியமிக்கப்பெற்று நாளும் பொழுதும் விழாவாக விளங்கியது. கல்வெட்டுகள் சிற்பங்கள், ராஜராஜன் காலத்து அளவியல் பெயர்கள் குறித்து தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. அரிய ஆவண நுால்.
– புலவர் சு.மதியழகன்