சிலப்பதிகாரத்தை நன்கு உள்வாங்கி ஆராய்ந்து, இலக்கியச் செழுமைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிலம்பில் காணப்படும் கருத்தோட்டங்களில் உள்ள பல்சுவையான பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்து இலக்கிய விருந்து படைக்கிறது.
ஒவ்வொரு காதையும் நுட்பமான பார்வையோடு அணுகப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பியத்தின் காட்சிகளைக் கட்டமைத்து எழுதுவதில் இளங்கோவடிகள் காட்டியுள்ள நேர்த்தியான நாடகப் பாங்கை நயத்தோடு வைக்கிறது.
கோவலன் – கண்ணகி திருமணம், இந்திர விழாவில் கோவலன்- – மாதவி பிரிவு, கோவலன்- – கண்ணகி மதுரை பயணம், கண்ணகியின் வழக்காடல், வஞ்சினம் என அனைத்தும் இலக்கியக் கூர்மையோடு விளக்கப்பட்டுள்ளன. காப்பியத்தின் திருப்புமுனையான கோவலன் -– மாதவி பிரிவு, கானல் வரிப் பாடல் விளக்கத்தோடு தந்துள்ளது.
காப்பியச் செழுமையை தந்துள்ள ஆவண நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு