பேச்சு நடையிலேயே எழுதப்பட்டுள்ள சிறு கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில், 23 கட்டுரைகள், சிறிய கதைகள் போல் புரிதலை எளிமையாக்குகின்றன. ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வில் கடந்து செல்லும் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்கி எழுதப்பட்டுள்ளது. இதில், சில அறிஞர்களின் பொன்மொழிகளில் துவங்குகின்றன.
வாழ்க்கையில் துவண்ட ஒவ்வொருவருக்கும் இந்த கட்டுரைகள் அளிக்கும் சிந்தனை வரப்பிரசாதமாக இருக்கும். மனதை விசாலப்படுத்தும். வாழ்க்கை ஒரு வினோத பயணத்தை உள்ளடக்கியது. அதில் பேரதிசயமாக இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன. கொண்டாட்ட மனநிலையுடன் வாழ்வின் போக்கை அணுக வைக்கிறது.
மனதை நலமாக பேணி, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை உரைக்கும் எளிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– மதி