ஆதிவாசி மக்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகளை, போராட்டங்களை, உறவுச் சிக்கல்களை, அதிகாரிகள் காட்டும் வன்மங்களை கருவாக படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
இதில், 12 கதைகள் உயிரோட்டமாக இருக்கின்றன. அம்மனுக்கு நேர்த்திக்கடன் பலி கொடுக்க செலவு செய்து, பண்டிகை கொண்டாடி குடும்பத்தினரை சந்தோஷப்படுத்தும் குடும்பத் தலைவன் பற்றியது. பண்டிகை செலவுக்காக வாங்கிய கடனுக்காக கொத்தடிமையாக இருக்க ஒப்பந்தம் செய்வதை பேசுகிறது.
எளிய மனிதர்களின் உணர்ச்சிகளை ரசித்து படிக்கலாம்.
– ஊஞ்சல் பிரபு