உருவமில்லாத இறைக் கொள்கையை வெளிப்படுத்தும் நுால். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல மார்க்கம் என்பதை விளக்குகிறது.
உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இஸ்லாம் என்ற அரபிச் சொல்லிற்கு சாந்தி, அடிபணிதல், போன்ற பொருள்கள் உள்ளதாகக் கூறியுள்ளது. இஸ்லாத்திற்கும், மற்ற மதத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குகிறது. உருவமற்ற நிலையில், ஏக இறைவனை நேரிடையாகத் தியானிக்கும் வகையிலானது இஸ்லாம் என கூறுகிறது. கடவுளைப் பற்றி சங்கராச்சாரியார் கருத்துகளும் பதிவாகியுள்ளன.
மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் கூறிய கருத்துகளும், குர்ஆனில் வருகிற கருத்துகளும் ஒத்துப் போகும் இடங்களைச் சுட்டி விளக்குகிறது. சமய நல்லிணக்கம் கருத்துகளுடன் துணை நிற்கும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்