இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதியை வரலாற்றுப் பூர்வமாக அலசும் நுால். இயற்கை வளங்கள், வளர்ச்சி, தகவல் தொடர்பில் முதன்மை நிலை என இலங்கையில் சிறப்பை கூறுகிறது. அதை கைப்பற்ற முயன்று, தோற்றவர்கள் விபரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. வென்றவர்களின் செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
உணவு, வளங்கள், கலாசார சிறப்புகளை கூறுகிறது. உள்நாட்டு போரால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவுகளின் ஊடாக அறியத் தருகிறது. அவை கண்முன் நடந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இலங்கை – இந்திய தொடர்புகளை வரலாற்றுப்பூர்வமாக சுருக்கமாக தந்துள்ளது. ஒவ்வொரு பகுதியின் துயரம், அகதிகளின் வாழ்க்கை தனித்தனியே மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள நுால்.
– மதி