நண்பர்கள், விருந்தினர்கள், மாமியார், மருமகள், குழந்தைகள் பேசுவதை நகைச்சுவையாக விவரித்து புரிய வைக்கும் நுால்.
நகைச்சுவையுடன், எதையும் ரசிக்க துவங்கினால், மன அழுத்தத்தால் குறையும் சக்தி, நோய்கள் விலகி உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.
மன அழுத்தத்தை கொடுக்கும் எதிர்மறை எண்ணங்கள், நகைச்சுவை உணர்வையும் துாண்டும் சக்தி கொண்டவை என்கிறது. பல நகைச்சுவைகள், வாழ்வியலை பேசுவதுடன், அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கின்றன.
பிறரை கேலி, கிண்டல் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் நகைச்சுவையை தவிர்க்க வேண்டும். அவசர உலகத்தில், மனதை ஒருமுகப்படுத்தி எதையும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ள துாண்டும் நுால்.
– -டி.எஸ்.ராயன்