இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை வலியுறுத்தி புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மனிதநேயம், பெண்ணியம், காதல் மணம், நாட்டு விலங்குகளின் மீது கொண்ட பேரன்பை வலியுறுத்துகின்றன.
மண்ணின் மணம் மாறாத பாத்திரப் படைப்புகள் ஒவ்வொன்றும் ஈர்ப்பது கதையின் வெற்றியாகிறது. உண்மை காதல், ஜாதி பேதங்களைக் கடந்து வேப்ப மரத்தை காப்பாற்றிய நிகழ்வு வியக்க வைக்கிறது.
படித்த வேதமும், நேசித்த தமிழும் வறுமையிலும் செம்மையாக வாழ வைத்த மாண்பை சொல்கிறது. வளர்த்த மாடுகள் மீது கொண்ட பேரன்பால் வெளிநாட்டுப் பயணத்தை துறந்த நிகழ்வு என இயற்கை கருத்துக்கள் விரவி கிடக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்