நாடித் துடிப்பை ஆராய்ந்து நோய், மருத்துவ தகவல்களை தொகுத்து தரும் நுால்.
‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி...’ என்ற குதம்பை சித்தர் பாடலை எடுத்துச் சொல்கிறது. கருவறையில் குழந்தை, 10 மாதம் இருக்கும் என தெளிவாக விளக்குகிறது. இரட்டை குழந்தை உருவாவது பற்றி விளக்குகிறது.
ஆரோக்கியம், ஊனமுற்ற குழந்தை பிறப்பதற்கான காரணங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. அண்டத்தில் உள்ளதே பிண்டம் என்பதற்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடி துடிப்பைக் கவனிக்க வேண்டும் என்கிறது.
வியாதி தீர தியானமே மருந்து என குறிப்பிட்டு உள்ளது ஆச்சரியம் தருகிறது.
– சீத்தலைச் சாத்தன்