மரத்தில் துவங்கி கூட்டில் முடியும், 17 தலைப்புகளை உடைய சிறுகதை தொகுப்பு நுால். மடியில் படுத்திருக்கும் பேரனுக்கு பாட்டி சொல்லும் விதம் ரசனையானது. இறந்த பின் ஆவியாக வந்து, பெட்டிக்கடையில் மூக்குப்பொடி கேட்பது குறித்த கதை கற்பனையானது.
சிவன் கோவிலுக்கு புதிதாக வந்த யானையின் இயல்பான குணத்தை, ‘கதை’ என்ற கதை பகிர்கிறது. யானையை முதல் முறையாக பார்க்கும் குழந்தைகளின் குதுாகலத்தை கூறுகிறது.
மனிதர்களின் இயல்பான குணங்களை வெளிப்படுத்தியிருக்கும் நுால்.