பொழுதுபோக்கு அம்சத்தில் ஓ.டி.டி., தளங்கள் குறித்த விபரங்களை சுருக்கமாக தரும் நுால். திரை உலகின் எதிர்காலம் இந்த தொழில் நுட்பம் தான் என்ற நிலை ஏற்பட்டது குறித்து விவரிக்கிறது.
ஓ.டி.டி., என்பது பற்றி சுருக்கமாக தருகிறது. இந்த தொழில் நுட்பம் எப்படி உருவானது, உலக அளவில் இதற்கு உள்ள மவுசு பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓ.டி.டி., தளங்கள் வரவால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி இதன் எதிர்காலம் குறித்த கணிப்பையும் தெரிவிக்கிறது.
தனிப்பட்ட எழுத்தாளரோ, படைப்பாளியோ இந்த தளத்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது. இதில் படைப்புகள் உருவாக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் தெளிவாக்கும் நுால்.
– ஒளி