நிருபரின் நினைவு கடலை விட ஆழமானது என்றும், வானத்தை விட உயர்வானது என்றும் உணர்த்தும் புத்தகம். கடத்தல் மன்னனாக இருந்த ஹாஜி மஸ்தான், மும்பையில் தமிழர் வாழ்க்கைக்குப் பாதுகாவலாக விளங்கியதை எடுத்துரைக்கிறது.
ஒளிவு மறைவு இன்றி எழுதும் இயல்பு, கிருஷ்ண வேணி தியேட்டரில் சினிமா பார்த்த தகவலை தெரிவிக்கும் இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் என்ற பத்திரிகை யாளர் அமைப்புக்கு கட்டடம் வாங்குவதற்காக பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கச்சேரி நடத்தி நிதி திரட்டினார் என்ற அரிய தகவலை தந்துள்ளார்.
அனுபவமாக நெஞ்சத்தில் தாங்கிக் கொண்டிருந்த நினைவு எல்லாம் இந்தப் புத்தகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்