சிறை அனுபவங்களை பதை பதைக்கச் செய்யும் நடையில் விவரிக்கும் நுால். நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக கடலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒதுக்கிய எண், புத்தகத்தின் தலைப்பாக தந்திருப்பது தனி அர்த்தம் தருகிறது.
அனுபவங்களும், நெருக்கடிகளும் தனித்துவமானதாக உள்ளன. சிக்கல்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்ட விதம், சூழ்நிலைகளை கையாண்ட தன்மையை உரையாடல்களின் வழியாக விவரிக்கும் பாங்கு பிரமிக்கச் செய்கிறது.
நீதிமன்ற நடைமுறைகள், வாதப் பிரதிவாதங்கள், கடலுார் சிறையின் வடிவமைப்பு, சிறைச்சாலையில் சக வாசிகளுடனான அனுபவங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் ஆவணப்படம் போல் விரிகிறது.
எழுத்து நடை வசீகரமாய் இருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு