பேச்சுக்கலையை சரியாக பயன்படுத்தும் வழிமுறையை விளக்கும் நுால். சொற்களை உரிய முறையில் உபயோகித்தால் உயரலாம் என வழிகாட்டுகிறது.
இந்த நுால், மூன்று பெரும் பகுதிகளாக பகுத்து தரப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்ற வரலாறு பற்றி முதல் பாகம் தெரிவிக்கிறது. அவை துணைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, உள்தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த பாகம், தகவல் தொடர்பில் சிறக்க என பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதிலும் பல்வேறு உட்கூறுகள் துணைத் தலைப்பில் தொகுத்து தரப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, அலுவலக கூட்டம் பற்றி எல்லாம் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாவது, மேடையில் முழங்கு என்ற தலைப்பிலானது. மேடைப் பேச்சுக்கலை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. பேச்சுக்கலையில் இவ்வளவு நுட்பங்களா என வியக்க வைக்கும் நுால்.
– மதி