ஊமை சந்தோஷம், குடத்துக்குள் ஒரு கோபுரம் எனும் இரு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு நுால். பள்ளி செல்லும் விடலை பருவத்தினர் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதி பாகுபாடின்றி பழகுவது பற்றி பேசுகிறது. ஊமை கண்ட கனவாக ஒரு தலை காதல் மாணவியரின் குறும்புத்தனங்களோடு பின்னப்பட்டிருக்கிறது.
பிராமணர் குடும்பத்தில் நிகழும் ஒரு திருமண நிகழ்வை விவரிக்கிறது, ‘குடத்துக்குள் ஒரு கோபுரம்’ கதை. பல்வேறு சீர்திருத்தங்களை கூறுகிறது. சாதி மறுப்பு, வரதட்சணை ஒழிப்பு, காதல் மணம் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்