ஒரு பக்கம் அளவில், 47 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
வீட்டில் முதியோரை கவனித்துக் கொள்வது நல்ல பழக்கம். அப்படி கவனித்தாலும், அவர்கள் மனதில் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணம் தலை துாக்கும். அதை தடுக்கும் வகையில், செய்ய முடிந்த வேலைகள் கொடுத்து, குடும்பத்திற்கு அவர்கள் கட்டாயமாக தேவை என்ற எண்ணத்தை உருவாக்குவது போல் அமைந்துள்ளது, ‘சுறுசுறுப்பு’ என்ற கதை.
எல்லா கதைகளிலும் ஒரு செய்தி உள்ளீடாக மறைந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். எளிய மொழிநடையில் வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. கதையை படித்தவுடன் திரும்ப அசை போட வைக்கும் எழுத்து முறை சிறப்பாக உள்ளது.
– முகிலை ராசபாண்டியன்