நள்ளிரவில் வீடுகளில் புகுந்து மனிதர்களை கொன்று புசித்த சிறுத்தையை வேட்டையாடிய சாகச அனுபவ கதை நுால். சிறுவர், சிறுமியருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மலர்ந்துள்ளது.
வேட்டையின் போது மயிர்க்கூச்செறியும் சாகசங்களை விவரிக்கிறது. வேட்டையாட காத்திருந்தவரையே சிறுத்தை பின்தொடர்வது நடுங்க வைக்கிறது. அடர்ந்த காட்டில் வாழும் அனுபவத்தை தருகிறது. இமயமலை அழகை காட்டுகிறது.
சலிப்பு தட்டாமல் படிக்கும் வகையில் சுவாரசியமாகஉள்ளது. படிக்கும் போது சிறுத்தை நம்மை பின் தொடர்வது போல் திகில் ஏற்படுகிறது. வனத்தின் காட்சிகள் ஆழமாக பதிவாகியுள்ளன. காட்டு விலங்குகள் சார்ந்து அரிய படிப்பினை தரும் எளிய சிறுவர் நுால்.
--– கண்ணன்