புள்ள எங்க படிக்குது, எனக்குன்னு வந்து வாச்சியே, மூஞ்சில முழிக்காதே, தொட்டதெல்லாம் தொலங்கல, சாண் ஏறுனா முழம் சறுக்குது, வாழவே பிடிக்கல, எனக்கு ஒரு சாவு வராதோ என, சலிப்புச் சொற்றொடர்களையே தலைப்புகளாக்கி, இனி இப்படி கேட்காதீர்கள் என அறிவுரை தரும் நுால்.
விடாமுயற்சி, தன்னம்பிக்கையை, ‘வண்ணத்துப்பூச்சியைப் பார், எத்தனை கட்டங்களைக் கடந்து வருகிறது... இலக்கினைத் திட்டமிடு, சிறகினை விரித்திடு, வானம் உனக்கு வசமாகட்டும்’ என்பது போன்ற வரிகள், நம் முகம் நமக்கானது அல்ல மற்றவர்களுக்கானது என காட்டுகிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என கவிதை வரிகளால் காட்சிப்படுத்துகிறது.
நேர்மறை கருத்தை எதிர்மறை தலைப்புகளால் உணர்த்தும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்