சீன மருத்துவமான அக்குபஞ்சர் முறையை பாடங்களாக வகுத்து கூறும் நுால். சீன மருத்துவ வரலாற்றில் துவங்கி, தனித்தனி தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.
அக்குபஞ்சர் பொருள் விளக்கம், வகைகள், அளவு முறை, பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் உபகரணங்கள் பற்றி விரிவாக தகவல் உள்ளது. அக்குபஞ்சர் கோட்பாடு மற்றும் விதிமுறைகள் தனி அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன.
தொடர்ந்து, ஜிங் லோ கோட்பாடு, உடலின் முக்கிய ஆதாரப்புள்ளிகளை அறிமுகம் செய்கிறது. அக்கு புள்ளிகளின் வகைகள், நோய் அறியும் முறைகள், நோய் ஏற்படுவதற்கு உரிய காரணங்கள் என, பல அம்சங்கள் தனித்தனியாக தொகுத்து தரப்பட்டுள்ளன.
அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படையை அறிய எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள அரிய நுால்.
– விநா