பாஞ்சாலி சபதத்தை பாரதியார் படைப்பதற்கு, திரவுபதி துகிலுரிதல் நாடகம் காரணமாக இருந்தது போன்ற கருத்துக்களை பதிவு செய்யும் நுால். பாஞ்சாலி சபதத்தைப் போற்றி, பாரதிதாசன் பாடிய பாடலையும் எடுத்துரைக்கிறது.
பாரதியின் சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை போன்றவற்றை தெரிவிக்கிறது. பெண் விடுதலையைப் பாடியதையும் தெளிவுபடுத்துகிறது. கருத்தின் உறுதித் தன்மையை உணர்த்தும் வகையில் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. பாஞ்சாலி சபதம் பொருள் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் சில பாடல்களையும், அவருடன் தொடர்புடைய தலைவர்களின் படங்களையும் அச்சிட்டு மெருகேற்றப்பட்டுள்ளது. பாரதியார் பற்றிய ஆய்வாக மலர்ந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்