பண்டைய தமிழ் இலக்கியத்தில் சிறுதானியங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து தந்துள்ள நுால். சிறுதானியம் என்பது கூலம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் உணவில் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகம் இருந்ததை, இலக்கியத்தில் இருந்து ஆதாரங்களைத் திரட்டி தந்துள்ளது. தொல்லியல் சான்றுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுதானியங்களின் பயன், அவற்றின் குணநலன்கள், மருத்துவப் பண்புகள், வேளாண் செயல்பாடு பற்றி எல்லாம் அரிய தகவல்களை தருகிறது.
சிறுதானியங்களில் உணவு சமைக்க ஏற்ற குறிப்புகள் பலவும் தரப்பட்டுள்ளன. பழங்காலம் முதலே இவை தமிழர் உணவில் ஆட்சி செலுத்தியதை துல்லியமாக பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் மரபு வழிபட்ட உணவுக்கான ஆதாரங்களை ஆராய்ந்து தகவல்களை வெளிப்படுத்தும் நுால்.
– ஒளி