ங்க காலத்தில் தோன்றிய சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் வள்ளல்கள் பற்றிய செய்திகளை தொகுத்து தரும் நுால். பழங்காலத்தில் செய்த மிகப்பெரிய கொடைகள் பற்றியும் அறியத் தருகிறது. வள்ளல் தன்மை பலநுாறு ஆண்டுகளுக்கு பின்னும் தமிழகத்தில் நிலைத்துள்ளதைக் காட்டுகிறது.
சிறுபாணாற்றுப்படை நுாலில் கடையெழு வள்ளல்களை விளக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை தமிழரின் உயர்ந்த அடையாளமாக போற்றப்படுகின்றன. பழங்கால நுால்களில் இதுபற்றி குறிப்புகளை தொகுத்து உயிரூட்டமுடன் தந்துள்ளது.
கொடையளித்த வள்ளல் விபரம், சிறந்த கொடைகள் பற்றிய தகவல்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பழந்தமிழர் இலக்கியத்தில் பதிவாகியுள்ள வாழ்க்கை முறை பற்றி எடுத்துரைக்கும் நுால்.
– மதி