திருமுருகன் திருத்தலங்கள் பற்றி அழகுடன் பேசும் நுால். ஒவ்வொன்றின் தனித்தன்மை, சிறப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
முருகன் தோன்றிய வரலாறு முதலில் உள்ளது. சிவனின் ஆறு முகங்களும், நெற்றிக் கண் நெருப்பும் கார்த்திகை மாதர் வளர்ப்பு கதையை சொல்கிறது. திருச்செந்துாரில் காயத்ரி மந்திர எழுத்துக்கள் போல் 24 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது நாழிக்கிணறு மட்டுமே உள்ளது.
கேரளாவின் கோட்டயம் அருகிலுள்ள பெருநா முருகன் வேலை தலைகீழ் பிடித்துள்ளார். கர்நாடகாவில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் குக்கி சுப்ரமணியர் பற்றிய தகவல்கள் உள்ளன. முருகன் கோவில்கள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. முருகப் பக்தர்களுக்கு வழிகாட்டும் களஞ்சியம் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்