திருவாசக பதிப்பு நுால். சிவபுராணம் துவங்கி அச்சோப்பதிகம் ஈறாக 51 பதிகங்கள் தரப்பட்டுள்ளன. பாடல்கள் பதம் பிரித்து பொருள் விளங்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் எந்தத் தலத்தில் பாடப்பெற்றது என்ற விளக்கம் தருகிறது. எந்த வகை பாட்டு இனத்தில் உள்ளது என்பதையும் குறித்துள்ளது. பொருளடக்கத்தில் தலைப்பிற்கேற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.
பதினான்காம் பதிகமாக உள்ள திரு உந்தியார் என்ற தலைப்பிற்கு ஞானவெற்றி என்று குறித்துள்ளது. மாணிக்கவாசகர் வரலாறு எளிய நடையில் தரப்பட்டுள்ளது. திருவாசக தேனைப் பருக உதவும். எங்கும் எடுத்துச் சென்று படிக்கும் கையடக்கப் பதிப்பாக உள்ளது.
– புலவர் ரா.நாராயணன்