படிப்பில் தோற்றவர்கள் அறிவால் வென்றதும், அறிவாளி எனச் சொல்லிக் கொண்டவர் தவறான பாதையில் சென்றதும் விவரிக்கப்பட்டுள்ள நுால். வாசிப்பு, பதிப்பாளர், எழுத்தாளர் எதார்த்தமும் விளக்கப்பட்டுள்ளன.
சிந்திக்கத் துாண்டும் நேபாள பட விமர்சனமும், வெளிநாடு பயணிப்போர் கருத்தில் கொள்ள வேண்டியவையும் இடம் பெற்றுள்ளன. திருமண பந்தத்திற்கு, தாம்பத்தியம், அனுசரணை முக்கியம் எனக் குறிப்பிடுகிறது.
வீடு கட்டுமானத்தில் கவனிக்க வேண்டியவை, முதுமைக்கான முன்னேற்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வங்கி, காப்பீட்டு நிறுவனங்களின் சேவை குறைபாடு, மொழிக் கொள்கையில் முரண்பாடு, ஊழல் என பல பொருண்மைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்