அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற புரிதலை தரும் நுால். கலியுகத்தில் கடவுள் அவதாரம் நிகழுமா என்ற கேள்விக்கு, இறைவியே கதாபாத்திரமாக உரையாடுகிறாள்.
பலவிதமான கதைகள் கோர்க்கப்பட்ட கதம்ப மாலையாக இருக்கிறது. காதல் என்பது உடல் அழகை சார்ந்ததல்ல... மாறாக, அக அன்பிலே உறைந்துள்ளது என முழங்குகிறது. தற்கொலைக்கு முயன்ற இரு மனங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் மருத்துவர் அன்பில் மனம் கரையும்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பின் விலாசமாக இருப்பதாலே, வாசகர்களின் மனதையும் அன்பின் வழியில் வழிநடத்திச் செல்லும் வல்லமை கொண்டதாக மிளிர்கிறது. புதுமை அனுபவத்தை தரவல்லது.
-– தி.க.நேத்ரா