நெல்லையில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட, துாத்துக்குடி மாவட்டம் குறித்த வரலாற்று தகவல்களை பதிவு செய்துள்ள நுால். மொத்தம், 123 தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டுள்ளது.
துாத்துக்குடி பெயர் காரணம் துவங்கி, பழங்கால வரலாறு வரை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆதாரங்கள், தொல்லியல் சான்றுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கடல் வளம், காட்டு வளம், ஆற்றுப்படுகை, தாவரங்கள், உயிரினங்கள் குறித்த விபரங்கள் உள்ளன.
பண்பாடு, கலாசாரம் பற்றி விரிவாக தருகிறது. வழிபாட்டு இடங்கள், வளர்ச்சியின் அடையாளங்கள் பற்றி சித்தரிக்கிறது. அரிய தகவல்கள் தேடி தரப்பட்டுள்ளன. துாத்துக்குடி மாவட்ட ஆவணமாக திகழும் நுால்.
– ராம்