பல்லவ மன்னன் குறித்த மரபுக்கவிதைகள்அடங்கிய நுால். தமிழ் மொழி மீது கொண்ட தீராத பற்றால் தன்னுயிரை மாய்த்தவன் என்று அறியப்படும் நந்திவர்மன் வீரம் மற்றும் குணங்களை பாடல்களில் வெளிப்படுத்துகின்றன.
காஞ்சி மற்றும் மாமல்லபுரத்தை உள்ளடக்கிய நிலப்பரப்பை ஆண்ட சிறப்பு, நற்குணங்கள், வீரம், வெற்றி, கல்விச்சிறப்பு வரலாற்றுத் தகவல்களோடு விருத்தப்பாக்களில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன.
நாட்டின் எல்லைகள், குகைகள் மற்றும் மலைக்கோவில்களில் செதுக்கிய சிற்பங்கள், நந்திவர்மனின் உறவுகள், நாட்டிய ஆர்வம், மொழிப்பற்று, வாழ்க்கை நிகழ்வுகளை சுற்றிப் பாடல்கள் நகர்கின்றன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு