மனிதகுலத்தின் வரலாற்றை கதை போல் எளிமையாகச் சொல்லும் நுால். கிரேக்கம், ரோம், பாபிலோன், பாரசீகம் போன்ற பண்டைய நாடுகள் புகழ்மிக்கதாக எழுந்ததை சுவாரசியமாக தருகிறது.
சீனப் பெருஞ்சுவர், பிரமிடுகள், நைல் நதிக்கரை நாகரிகம், ஆசியாவில் அங்கோர்வாட், பாமியன் புத்தர் சிலைகள், ஆஸ்திரேலிய பவளத்திட்டுகள் என அழைத்துச் சென்று காட்டுகிறது.
வழிபாட்டு இடம், நுாலகம் என, பண்பாட்டு சின்னங்களை எல்லாம் வரலாற்றுப் பின்னணியுடன் தெளிவாகக் காட்டுகிறது. உலகின் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ள மரபுகள் வழியாக மனித இனம் பரவி படர்ந்த பாதையைக் காட்டுகிறது. பன்முக அடையாளமே பெருமிதப்படுத்தும் என்பதை வலியுறுத்தும் நுால்.
– ஒளி