மாணவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளிம்பு நிலை மக்கள் விரக்தியை ஆத்திசூடி வடிவில் சொல்லும் நுால். இளைஞர் நலம் பற்றிய கவலையை, ‘திரையரங்கு வாசலில் வரிசையில் அடித்துக் கொள்கிறது வருங்காலம்’ என மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது.
அரசியல் அவலத்தை, ‘நெகிழிப் பூக்களில் தேனைத் தேடும் வாக்காளர் பூச்சி’ என சாடுகிறது. இயற்கை வளம் சுரண்டலை, ‘தானிருக்கும் மணல் வீட்டைத் தானே தேடும் ஆறறிவு எங்கே போவான் நாளைக்கு’ என கண்டிக்கிறது.
‘மரம் நட மண்ணில்லை சரக்குந்தில் கொள்ளை; மரம் பிழைக்க நீரில்லை புட்டியில் வியாபாரம்; காற்று மட்டும் மாசுடனே கடையில் விற்பார் வருங்காலம்’ என்ற வரிகளில் கோபம் கொப்பளிக்கிறது.
– புலவர் சு.மதியழகன்