அன்பை, மகிழ்ச்சியை குழந்தையிடம் காட்டும் தாய்க்கு அது திருப்பிக் கிடைப்பதை பாடமாகக் கூறும் நுால். ஆடு, மாடு, கன்று என தோட்டச் சூழலில் வாழும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை பகிர்கிறது.
கரன்ட் போய்விட்டது என்றால், ‘எந்த ஊருக்கு’ என கேள்வியால் சிந்திக்க வைக்கிறது. தாயும், குழந்தையும் பரிமாறும் அன்பை பகிர்கிறது. பெரியவர் கற்றுக்கொள்ள உதவுகிறது. குழந்தை வளர்ந்த பின்னும் தாய் மடியை தலையணையாக்கும் உணர்வை துாண்டுகிறது. குழந்தையின் குறும்பு, குதுாகலத்தை ரசிக்க வைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்