பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் அருளியதில், வசியம் என்ற கலை குறித்து ஆய்வு செய்து கருத்துகளை தெரிவித்துள்ள நுால். வசியம் என்பதை எட்டு வகையாக பிரித்து வகைப்படுத்தி கூறுகிறது. அரசியல்வாதிகளுக்கு தேவையானது ராஜ வசியம் என்கிறது.
புருஷ வசியம், ஸ்திரி வசியம் தவறாக அனுசரிக்கப்படக் கூடாது என வலியுறுத்துகிறது. சத்ரு வசியம் உபயோகமானது; அது பகைமைக்கு இடம் இல்லாமல் ஆக்கிவிடும். மிருக வசியம் பற்றியும் உள்ளது.
லோக வசியம் எல்லா ஜீவன்களையும் நேசிக்கச் சொல்கிறது. தேவ வசியம் இறைவன் கருணையை எதிர்பார்க்கச் செய்கிறது. எதை, எங்கே, எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாகச் சொல்கிறது. வசியக்கலை பற்றி தெளிவாக விளக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்