ஜெகத் குரு ஆதி சங்கரரின் ஆன்மிகக் கருத்துக்களை ஆங்கிலத்தில் விளக்கும் நுால்.
விபூதி, மன்னித்தல், ஆகாரம் என்ற சொற்களின் விளக்கம் அளித்துள்ளது. ஆத்மாவிற்கு இறப்பு இல்லை என்கிறது. நிர்வாணத்தின் விளக்கம், விவேக சூடாமணி, ரஜோ-தமோ- சத்வ குணங்களின் விளக்கம், கர்மாக்களின் மூன்று வகைகளான சஞ்சித,- பிராருப்த, -ஆகாமிய -கர்மாக்களின் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அத்வைத,- விஷிட்டாத்வைத,- துவைத என்ற கொள்கைகளின் விளக்கம், ஆத்ம போதனைகளின் விளக்கம் தரப்பட்டுள்ளது. மாத்ரு பஞ்சகத்தின் விளக்கம், ஆத்மா குறித்த சங்கரரின் பார்வைகள், கிருஷ்ணரின் வாழ்க்கை உணர்த்தும் தத்துவம் ஆகியவை படிக்கும்போது ஆன்மிக அறிவு விசாலமாகிறது.
– முனைவர் கலியன் சம்பத்து