பரதநாட்டியக் கலை பற்றிய அகராதி நுால். முக்கிய சொற்களுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்து, இந்த கலையை எளிதில் புரிந்து கொள்ள வழிகாட்டுகிறது.
புத்தகத்தில், பரதநாட்டியம் குறித்த வண்ண புகைப்படங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இவை, வாசிப்பை இனிய அனுபவமாக்குகின்றன. நடனக்கலை பயிலும் மாணவ -– மாணவியருக்கு மட்டுமின்றி, நடன ஆர்வலர்களுக்கும் உதவும்.
நடனப் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோருக்கு பயன்படும். பரதநாட்டியக் கலையில் பிரபலமாக விளக்கும் இசைக் கலைஞர் வித்யா பவானி சுரேஷ் முயன்று உருவாக்கியுள்ளார். நடன முத்திரைகளுக்கு அவரது மகளும், சீடருமான மஹிதா சுரேஷ் அளித்துள்ள விளக்கம் அருமை.
– விஜய்