தகுதி அற்றவன் தலைமை ஏற்பதும், தகுதி பெற்றவன் பல்லக்கு சுமப்பதும் ஏன் என்ற கேள்விக்கு விடை தேடும் நுால். ஆத்மா, பரம்பொருளும் பிறப்பும், அறிவின் பரிணாமம் உட்பட 30 தலைப்புகளில் ஆராய்ந்து விளக்கம் சொல்கிறது.
பகவத்கீதை, ஆத்மாவை வாழ்வின் ஆதாரம், உடலுக்கு மூலம் என்கிறது. உயிர் மனம் ஒன்றுவது சாங்கிய யோகம் எனப்படும். ஆத்மாவும், பிரம்மமும் அழிவற்றவை. அவை ஒன்றுவது அட்சரப் பிரம்மயோகம்.
சுலோகங்கள் வழியாக ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பையும், ஆத்ம ஞானமே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு என்று கீதை சொல்கிறது. வேதாத்ரி மகரிஷியின் உபதேசங்கள், கண்ணதாசன் பாடல்கள் வைரமாய் மின்னுகின்றன.
–- முனைவர் மா.கி.ரமணன்