பங்கு சந்தை குறித்த பார்வை, விபரங்களை முன்வைக்கும் நுால். புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் தொகுத்து தரப்பட்டுள்ளது.
ஷேர் மார்க்கெட் எவ்வாறு செயல்படுகிறது; பங்குகள் எவ்வாறு விற்பனைக்கு வருகின்றன; அதன் அடிப்படை என்ன, பங்குகளை எவ்வாறு வாங்க வேண்டும், என்னென்ன அளவுகோல்களுடன் அணுக வேண்டும் போன்ற கேள்விகளை முன்வைத்து சொல்கிறது.
மாத வருமானத்தை நம்பி இருப்போரும் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருமானம் பெருக்கலாம் என நம்பிக்கை ஊட்டும் நுால்.