நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, உடல், மனதின் முக்கியத்துவத்தை விளக்கும் நுால். எளிய நடையில் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
அன்றாடம் சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, நலமுடன் வாழ முடியும் என்ற உறுதியை ஏற்படுத்துகிறது. ‘நம் நலம் நம் கையில்’ என துவங்கி, ‘வியாதிகளை தவிர்க்கும் உடற்பயிற்சி’ என்பது வரை, 27 தலைப்புகளில் உரைக்கிறது.
மழைக்காலத்தில் என்ன வகை பாதிப்பு ஏற்படும், பருவ மாற்றங்களின் போது ஏற்படும் உடல் செயல்பாடு, அதன் மூலம் பரவும் நோய்கள், அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய வழிமுறைகள் என பலவற்றையும் தருகிறது. உடல் நலமுடன், மனதை பாதுகாப்பது பற்றியும் சொல்கிறது. நலம் காக்கும் எளிய நுால்.
– ராம்