திருவள்ளுவரின் கருத்துக்களை மனதில் வாங்கி, சிந்தித்து ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பும் வழிமுறையை தெரிவிக்கும் நுால்.
வள்ளுவர் தீவிர விமர்சகராக பல்வேறு வகையிலான செய்திகளைத் தந்து, சிந்திக்கத் துாண்டுவது பற்றி விவரிக்கிறது. உலகத் தத்துவவாதிகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது. உண்மை அறிவை அடையும் வழியைக் கூறுகிறது. நீதி, அநீதி பற்றி எடுத்துரைக்கிறது.
மனிதன் பிறந்தது முதல் இறுதி காலம் வரை செய்ய வேண்டியவற்றையும், செய்யக்கூடாதவற்றையும் விளக்குகிறது. நாடு, அரசன், ஆட்சி, குடிமக்கள், காதல் வாழ்க்கை தத்துவங்களை திருக்குறள் கருத்துக்களோடு பொருத்திக் காட்டுகிறது. அறிவு, அறியாமை, ஞானம் விளக்கமாக கூறப்பட்டுள்ள நுால்.
– புலவர் ரா.நாராயணன்