விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும் கதைப்பாடல் பற்றிய ஆய்வு நுால். வீரம், போர்த்திறமைக்கு, ‘பகதுார் வெள்ளை’ என்று அடைமொழி தரப்பட்ட வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது. ‘பகதுார்’ என்பதே காலப்போக்கில், ‘பாதர்’ என மருவியதாகக் கூறுகிறது.
காட்டில் தனித்து நின்ற சிறுவன் வெள்ளையனை, கட்டபொம்மன் சந்திக்கும் சூழல் கூறும் கும்மிப்பாடல்கள் நெகிழ வைக்கின்றன. வெவ்வேறு கதையோட்டத்தோடு பல திரிபுகளையும் குறிப்பிட்டுள்ளது.
காலமெல்லாம் கடமை வீரனாக விளங்கி, கட்டபொம்மனுக்காக உயிரையே கொடுத்த வெள்ளையத்தேவனின் அடிப்படை குணங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு