குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க வழிகாட்டி நுால். இதில் குறிப்பிடும், ‘ரேவோ’ என்பது, ‘ரெவல்யூஷன்’ என்பதன் சுருக்கமாக உள்ளது. நல்ல நோக்கத்திற்கான நெறிகளை, வினா – விடை, கேள்வி கேட்டு தெளிவு பெறுதல் மற்றும் செயல்முறை பயிற்சியாக தரப்பட்டுள்ளது.
குழந்தைகளின் நுண்ணறிவை வளர்க்கும் விதமாக பெற்றோர் செய்முறை பயிற்சியாக பயன்படும் வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கை அனுபவங்களை சிறுவர் சூழ்நிலையில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உரையாடல் வழியாக உதாரணங்களோடு சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.
கணவன் – மனைவிக்கான உறவு, தாயின் கருவறைச் சிந்தனையை உளவியல் ரீதியாகச் சிந்தித்து எழுதியிருப்பது போற்றுதற்குரியது.
-– ராம.குருநாதன்