நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர் சட்டங்களை அறிந்து பணியாற்ற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சட்ட விதிமுறைகளை தெளிவுபடுத்துகிறது.
இந்த புத்தக உள்ளடக்கம், 11 தலைப்புகளில் உள்ளது. உள்ளாட்சி அமைப்பு முறை பற்றி தெளிவு படுத்தியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சட்டங்களை விவரிக்கிறது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளையும் பட்டியலிடுகிறது.
உள்ளாட்சிகளில், நிர்வாக அமைப்பு, மன்ற கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அறிந்து செயல்பட வேண்டிய சட்டவிதிகள் உரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை அறிய விரும்புவோருக்கு அரிய கையேடு.
– மதி