திருப்பாவை பாசுரங்கள், திருவெம்பாவை பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்களுக்கு எளிய உரை தரும் நுால்.
மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரியதாக பக்தி பெருக்குடன் குறிப்பிடுவர். வெள்ளத்தில் ஏற்படும் சுழி துவக்கத்தில் மெதுவாகவும், அதை உணர்வதற்குள், மிக வேகமாக ஆமிழ்த்திவிடும்.
அதுபோல் மயக்கத்தில், திசை தெரியாது செல்லும் உயிரினங்களை உணர்வூட்டி, பொன்னான வாசகத்தால் கைதுாக்கி விடும். திருப்பாவை பாசுரங்களை தினமும் பாராயணம் செய்யலாம். கண்ணன் பாலகனாக இருந்தபோது நிகழ்த்திய வீரச்செயல்களை எடுத்துச் சொல்வதால் தைரியம் வளரும். மனதார பக்தி செலுத்தினால் இறைவன் ஓடோடி வருவான் என விளக்கும் நுால்.
– வி.விஷ்வா