சிந்திக்கும் திறனை துாண்டிவிடும் கருத்துகளின் தொகுப்பு நுால். பிரபல தத்துவவியல் அறிஞரின் சிந்தனைகள் கேள்வி -– பதில்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது. முதலில், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என துவங்குகிறது. மிக எளிமையாக அதற்கு விடை கூறுவது போல் கருத்துகளை பகிர்கிறது. தத்துவார்த்தமாக போதிக்கிறது. அடுத்து, ‘சமூகத்திற்கு உங்கள் பொறுப்பென்ன?’ என முன் வைத்து போதனை போல் கருத்தை தெரிவிக்கிறது.
இது போல், ஒன்பது முக்கிய கேள்விகளை முன்வைக்கிறது. ஒவ்வொன்றின் பற்றியும் விவாதமாக கருத்தை சொல்கிறது. போர், கல்வி, உலக அமைதி, மனிதன் முழுமையாக மாறும் வழிமுறை, சுதந்திர வாழ்க்கை என்பது பற்றி எல்லாம் பேசுகிறது. மனதை எளிமையாக்கும் தத்துவ விளக்க நுால்.
– மதி