சமுதாய நோக்கில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
நெஞ்சில் குடியிருந்தவளை, பல ஆண்டுகளுக்குப் பின் விமான பயணத்தில் சந்தித்த பின்விளைவை சித்தரிக்கும், ‘முதலாளி மனைவி’ என்ற கதை புதிய கோணத்தில் சமூகத்தை பார்க்க வைக்கிறது.
புத்தக தலைப்பாக உள்ள, ‘படிப்பு தந்த பதவி’ கதை உடன் படித்தவன், மாவட்ட அதிகாரியாக வரும்போது ஏற்படும் பிரச்னையை அலசுகிறது. அந்த காலத்தில் படிக்க விரும்பாதவன், உதவியாளனாக இருப்பதை சொல்லி இருக்கிறது. படிப்பு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறது.
‘நிரபராதி’ என்ற கதை, ‘பாவம் ஓரிடம் பழி ஓரிடம்’ என்று சொல்கிறது. தப்பாக நினைத்ததற்கே தண்டனை கிடைக்கிறது. ‘மனைவியின் அறிவு’ என்ற கதையும் திரும்பப் படிக்கத் துாண்டுகிறது.
– சீத்தலைச் சாத்தன்