ஓசைநயம் பிறழாது அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். கிராமத்தின் சுகமான ஈரக்காற்று பாடல்களில் வீசுகிறது; படிப்போர் உள்ளங்களை வருடுகிறது.
குழந்தைகளுக்கான பல பாடல்கள் நிறைந்து உள்ளன. ‘பழைய பேப்பரும் குப்பைத் தொட்டியும் ஏழை குழந்தைகளுக்குச் சாப்பாடு’ என்ற வரிகள் வறுமையை பறைசாற்றுகிறது. ‘பள்ளியிலே தமிழைக் காணாம்; பழகுதமிழ் பேசக் காணாம்’ என்னும் வரிகள் மொழியுணர்வை வெளிப்படுத்துகிறது.
சமூக அவலங்களை சாடுகிற பாடல்களும் இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, காதல் பண்பாடு என்ற தலைப்புகளில் அமைந்த நாட்டுப்புற பாடல்களும் ஓசை நயத்தோடு அலங்கரிக்கின்றன. சமூக பாடல்கள் நிறைந்த நுால்.
–- புலவர் சு.மதியழகன்