மேற்காசியா பகுதியில் நடந்து வரும் கொடூர மோதல்களின் பின்னணியை சொல்லும் நுால். வரலாற்றில் நீண்ட நெடிய சம்பவங்களை தொகுத்து கதை போல் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளது.
பண்டைய பாலஸ்தீனத்தை அறிமுகம் செய்வதுடன், 43 அத்தியாயங்களில் மோதல் நிறைந்த நிலத்தின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. பாலஸ்தீன நாகரிகம், அரேபியா பற்றிய விபரம், யூதர்களின் புரட்சி என்று புரியும் வகையில் தலைப்பிட்டு தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அங்கு பெண்கள், குழந்தைகள், முதியோர் என வேறுபாடின்றி பேரழிவுக்கு மடியும் காலம் இது. அடங்கா வெறியுடன் போர் நடந்து வருகிறது. எப்போது முடியும் என்று சொல்ல முடியாது. இந்தச் சூழலில் ரத்தம் தோய்ந்த அந்த மண்ணின் கதையை எளிய நடையில் தந்துள்ள நுால்.
– மதி