மெக்சிகோ நாட்டிற்கு வேலை நிமித்தமாகச் சென்று தங்கியிருந்த எழுத்தாளரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். திகில் ஏற்படுத்தும் வகையில் துவங்கி, கருத்துகள் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
மெக்சிகோ அடிக்கடி நிலநடுக்கம் வரும் நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பேசும் ஸ்பானிஷ் மொழி தொடர்பான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பண்பாடு, பழக்க வழக்கம் பொருத்தமாக தக்க இடங்களில் கூறப்பட்டுள்ளன.
வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவின் பழமை, புதுமையை எடுத்துரைக்கும் வகையில் கருப்பு வெள்ளை படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. எளிமையாக நகைச்சுவை ததும்பும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அழகுணர்வின் வெளிப்பாடாக வெளிவந்திருக்கும் இந்நுால், எல்லா தரப்பினரையும் கவரும்.
– முகிலை ராசபாண்டியன்